வானதிரையன்பட்டினத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

தா.பழூர், செப். 23: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வானதிரையன் பட்டினம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தனசேகரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் உதவியாளர்கள் சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணை தலைவர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தை நலம் ,அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் பரிசோதனை,பல் நோய்கள், நுரையீரல் நோய்கள் ,இருதய நோய்கள், நரம்பியல் நோய்கள், சித்த மருத்துவம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காச நோய், உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதன் மூலம் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தனர். இந்த முகாமில் சுற்ற வட்டார பகுதிகளில் இருந்து வநத சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: