மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு

ஊட்டி, செப். 22: நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:மருத்துவம் சார்ந்த பட்டம், செவிலியர் பட்டயப்படிப்பு, மருந்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கலந்தாய்வு கடந்த 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. www.tnmedicalselection.org மற்றும் www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

மருத்துப் பாடபிரிவுகளை தேர்வு செய்ய கிராமப்புற மாணவர்கள் மற்றும் மலை வாழ் மாணவர்களுக்கான சிறப்பு உதவி மையம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: