நத்தம், செப். 20: திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாவட்ட திமுக இளைஞரணியினரும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி நத்தத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரும் 24ந் தேதி நத்தத்தில் இக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. இதற்காக மதுரை செல்லும் சாலையில் கே.எஸ்.எஸ். கார்டனை சேர்ந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணியை திமுகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். அந்தப் பணிகளுக்காக இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் எந்த வகையில் வசதிகளை அமைத்து ஏற்பாடு செய்வது என்பது குறித்து இடத்தை பார்வையிட்டு பணியை நிறைவேற்றி வருகின்றனர்.