அரசு வழங்கிய பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும்

சிதம்பரம், செப். 20:  சிதம்பரம் அருகே உள்ள கள்ளிக்காட்டு தெரு, கோ.ஆடூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமாரி மற்றும் ஊர் மக்கள் சிதம்பரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,  நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கும் எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 29 நபர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் அதனை அரசு உரிய ஆய்வு செய்து மேற்படி நபர்களுக்கு அரசு கிராமங்களில் வீட்டுமனைகளை ஒப்படைப்பு செய்து கடந்த 2017ம் ஆண்டு என்னையும் சேர்த்து 30 நபர்களுக்கு அரசு பட்டா வழங்கியது.

 அந்த இடத்தில் 30 குடும்பங்களும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி உரிய வாய்தா ரசீது, மின் இணைப்பு, குடும்ப அட்டை அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பெற்று வசித்து வருகிறோம். எங்களுக்கு இந்த இடத்தைத் தவிர வேறு எந்த சொத்துக்களும், மனைகளும் கிடையாது. மேற்படி எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவானது கிராம கணக்கில் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளது. அரசு இலவசமாக வழங்கி அதனை வருவாய் கணக்கில் பதிவு செய்யாமல் உள்ளதால் எங்களுக்கு மிகுந்த சிரமமும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.

நான் மற்றும் 29 குடியிருப்பு வாசிகளுக்காக அளிக்கும் இந்த பொதுநல மனுவை இத்துடன் இணைத்து தாக்கல் செய்துள்ள ஆவணங்களை தீர பரிசீலனை செய்து எங்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட இலவச பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்து, எங்களது சொத்து எந்த வித வில்லங்கமும் இன்றி அனுபவிக்க உரிய உத்தரவு பிறப்பித்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: