கொரோனா தடுப்பூசி முகாம்

கடலூர், செப். 13:  அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், சுந்தரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் 3,742  சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள்  நடைபெற்றன. கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இதுபோன்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும்  பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மாவட்ட  ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் மீரா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: