பெரம்பலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 466 மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

பெரம்பலூர்,செப்.6: புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 446 மாணவிகளுக்கு மாதம் தலா ரூ1,000 வழங்குவதற்கான வங்கி கணக்கு அட்டையை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 446 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் நேற்று வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்ட ப்படிப்பு, தொழிற்கல்வி ஆ கியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்விபயின்று முடி க்கும் வரை, மாதம் ரூ1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம்’ வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் ஆர்டிஇ-ன் கீழ் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும் புது மைப்பெண் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 1,371 மனுக்கள் பெறப்பட்டு விசாரனை செய்து 446 மாணவிகளுக்கு நேற்று வங்கிஅட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 571 மனுக்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. 2ம் கட்டமாக வரப்பெற்றுள்ள 865 மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: