விவசாயிகள் மகிழ்ச்சி ஐசிஎஸ்சி பாடப் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல வில்வித்தை போட்டிகள்

கரூர், ஆக.26: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான வில்வித்தை போட்டிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சேத்ரா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூர்  விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் ஐசிஎஸ்சி பள்ளி செயலாளரும், கரூர் மாவட்ட ஆர்ச்சரி சங்க தலைவருமான கார்த்திகாலட்சுமி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.போட்டிகள் 14 வயதிற்கு உட்பட்டோர் 16 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்றது. மொத்தம் தமிழ்நாடு பாண்டிச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் கயலேஸ்வரி முன்னிலை வகித்தார், கரூர் லிட்டில் ஏஞ்சல் பள்ளியின் முதல்வர் உஷா மற்றும் அரவக்குறிச்சி விஜயா இன்டர்நேஷனல் பிரைம் பள்ளியின் முதல்வர் சதிஸ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Related Stories: