மக்கள் தொடர்பு திட்ட முகாம்: எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், வெள்ளியூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மதுசூதனன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் என்.மதியழகன், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன்,  ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் தினேஷ், கிராம நிர்வாக அலுவலர் நி.ஜீனத்கொசர், ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணைத் தலைவர் டி.முரளிகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த முகாமில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பிறகு பயனாளிகளுக்கு பட்டா நகல், விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பு இயந்திரம், விவசாயிகள் பயன் பெறும் உபகரணங்கள், விவசாய உரங்கள், தோட்டக்கலைத் துறையின் விதைகள், ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதிநாதன், ஒன்றிய துணை செயலாளர் மனோகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் டி.எம்.எஸ்.வெங்கடேசன், நிர்வாகிகள் த.சுகுமாரன், என்.ராஜீ, கஜேந்திரன், கன்னியப்பன், டி.மூர்த்தி, ஆர்.முருகைய்யன், குட்டி, வி.எம்.முருகேசன், அஜீத் குமார், யுவராணி, நாகராஜ், தேவி, கிரிஜா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

Related Stories: