கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில் செயல்பட்டுவரும் திருமுருக கிருபானந்த வாரியார் கல்வி அறக்கட்டளை சார்பில், 29வது ஆண்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர்களுக்கு வாரியார் விருது வழங்கும் விழா, புலவர்கள் படத்திறப்பு விழா ஆகியவை மேலவலம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வாரியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கௌரவ தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். முன்னதாக செயலாளர் திருக்காமு அனைவரையும் வரவேற்றார்.  அறக்கட்டளை அறங்காவலர் சண்முகம் ஆண்டறிக்கை வாசித்தார். இதில், சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் வேலாயுதம், வடபாதி ஆதீனம் சக்தி முத்துக்குமாரசாமி, தமிழ்நாடு மின்வாரிய உதவி இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ஊக்க தொகை வழங்கினர்.

இதில், ஏராளமான பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருமுருக கிருபானந்த வாரியார் கல்வி அறக்கட்டளை செய்திருந்தது. விழாவின்போது, பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: