திருமாவளவன் பிறந்த நாள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

திருக்கழுக்குன்றம்: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில் விசிக ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் திருப்போரூர் தொகுதி செயலாளர் அ.ந.பெருமாள், திருக்கழுக்குன்றம்  வடக்கு ஒன்றிய செயலாளர் திருமணி சதீஸ், நகர செயலாளர் செந்தில், வழக்கறிஞர் திவாகர், ஒன்றிய துணை செயலாளர் பூபால், ஒன்றிய பெருளாளர் கங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேப்போன்று, திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமத்தில் இயங்கி வருகின்ற  அரசு பள்ளியில் திருமாவளவனின் பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவிற்கு விசிக ஒன்றிய துணை அமைப்பாளர் ராஜவளவன் தலைமை தாங்கினார். விழாவின்போது  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும்  நோட்டு, புத்தகம் பேனா, பென்சில், ஜாமன்றி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை கொத்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் மற்றும் சமூக ஆர்வலர் பிச்சை முத்து,  விசிக கிழக்கு ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு ஆகியோர் வழங்கினர்.

இதில், ஒன்றிய பொருளாளர் எழில்ராவணன், விசிக பொறுப்பாளர்கள் எச்சூர் ஆனந்த், பக்தா, விஜய், பார்த்தி, நவீன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோடீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: