எட்டியம்மன் கோயில் திருவிழா

மதுராந்தகம்: தோட்டநாவல் கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கிணார் ஊராட்சியில் தோட்ட நாவல் கிராமம் உள்ளது. இங்குள்ள  எட்டியம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவினை முன்னிட்டு 16ம் தேதி காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து பகல் 12 மணி அளவில் கோயிலில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கூழ் காய்ச்சி கொண்டு வந்து கோயில் அருகே வைத்து ஒன்றாக கலந்து பக்தர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எட்டியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறு அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

இந்த அம்மன் வீதி உலா எட்டியம்மன் கோயில் தெரு, பாடசாலை தெரு வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: