காங்கிரசார் பாதயாத்திரை

சேலம், ஆக.11: சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திர தின பவள விழாவையொட்டி,  பாதயாத்திரை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பாதயாத்திரை சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 75 கீ.மீட்டர் தூரம் வரை நடக்கிறது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் 5 ரோடு பகுதிக்கு பாதயாத்திரை நேற்று வந்தது. இதில், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு கலந்து கொண்டார். முன்னதாக அந்த பகுதியில் உள்ள தியாகி திருப்பூர்குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து அழகாபுரம் வழியாக பாதயாத்திரை சென்றது. இதில் துணை மேயர் சாரதா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, சிவக்குமார், ராஜகணபதி, நிசார், பழனி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: