நடுவனூரில் கிடா கறி விருந்து

நத்தம், ஆக.10: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நடுவனூரில் உள்ள கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் வளர்பிறை முதல் திங்கட்கிழமை விழா கொண்டாடப்படும். அதன்படி நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில் அங்குள்ள கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து கிடாய்கள் வெட்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விருந்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நடுவனூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: