காங்கிரசார் பாதயாத்திரை

சங்ககிரி, ஆக. 10: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதயாத்திரை நேற்று துவங்கியது.மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் கோபால் கொடியசைத்து பாதயாத்திரையை துவக்கி வைத்தார். சங்ககிரி அக்கமாபேட்டை காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய பாதயாத்திரை எடப்பாடி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், மேச்சேரி வழியாக சென்று வரும் 14ம் தேதி ஓமலூரில் நிறைவடைகிறது. இதில், மாவட்டத் துணைத் தலைவர்கள் கோவிந்தன், நேரு, மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, நடராஜன், விஜயகுமார், பழனிசாமி, நாச்சியண்ணன், வட்டாரத் தலைவர்கள் சரவணன் (சங்ககிரி), லட்சுமணன் (நங்கவள்ளி), நகர தலைவர்கள் சந்திரன் (இடங்கணசாலை), நாகராஜூ (எடப்பாடி) மாணவர் காங்கிரஸ் அகில்பிரனேஷ், சுரேந்தர், லோகேஷ், காபிரியேல்பிரவின்குமார்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: