காசிமேஜர்புரம் ஊராட்சியில் கிராமசபை சிறப்பு கூட்டம்

தென்காசி, ஆக. 9:  தென்காசி யூனியன் காசிமேஜர்புரம் ஊராட்சியில் கிராமசபை சிறப்பு  கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் குத்தாலம் இசக்கி பாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஊர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். வார்டு கவுன்சிலர்கள் வரலட்சுமி, தேவி, சுப்புராஜ், குமுதாதேவி, அய்யம்மாள், அருணாதேவி, ஐயப்பன், ஆதிலட்சுமி, திமுக பிரமுகர் இசக்கி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories: