போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

ஈரோடு, ஆக.8: ஈரோடு அடுத்துள்ள சித்தோடு போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்.என். புதூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள பேக்கரின் ஒன்றின் முன்பு நின்றிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் தலா 2 அட்டைகள் போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த என்பவர் மூலமாக சேலத்தில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்றதாக ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த டையிங் தொழிலாளி திலீப்குமார் (23), அதேபகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வினித்குமார் (22) ஆகிய 2 பேர் மீதும் சித்தோடு போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 14 சிறிய அட்டை பெட்டிகளில் விற்பனைக்கு வைத்திருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: