கலைஞர் 4ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு, ஆக.8: கலைஞர் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி மரியாதை செலுத்தினார்.  தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம்  நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஈரோடு, முனிசிபல் காலனி பகுதியில், கலைஞர் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கும் அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டு கலைஞரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, நகரின் பல்வேறு பகுதிகளிலும் திமுக கிளைகள் சார்பில் அந்தந்த பகுதிகளில் கலைஞரின் உருவ படத்துக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: