வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றம்

கோவில்பட்டி, ஆக. 8: கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான அன்னை பத்ரகாளியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் வேல்முருகேசன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், பெண்கள் மங்களப்பொருட்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். காலை 10.30 மணிக்கு கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

பெண்கள் கொடிமரத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். ஆடித்திருவிழா வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 7.35 மணிக்கு காலை பூஜை, மாலை 3 மணிக்கு நடை திறப்பு, மாலை 5 மணிக்கு பூஜை, நாதஸ்வர நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா, இரவு கலையரங்கத்தில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் வேல்முருகேசன், துணை தலைவர் அழகுவேல் என்ற சண்முகராஜ், செயலாளர் சண்முகராஜா, துணை செயலாளர் வள்ளியப்பராஜ், பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: