திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை கஞ்சா விற்ற 7 பேர் கைது

திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்ற 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனை செய்த ஜெயசீலனை (47) போலீசார் கைது செய்தனர். மேலும், ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோயில் பின் பகுதியில் நடத்திய சோதனையில் காமாட்சி (73) மூதாட்டி கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூதாட்டி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சூரஞ்சேரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (எ)சூரியன் (23) வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. உறையூர் பெரிய செட்டி தெரு தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள இடத்தில் கஞ்சா விற்பனை செய்த பெரிய செட்டி தெருவை சேர்ந்த பிரபாகரன் (43), குழுமணி சாலையை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத் (24) ஆகிய இருவரையும் உறையூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி கீழ ஆண்டாள் வீதி பகுதியில் கோட்டை போலீசார் அப்பகுதியில் சோதனைகள் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கீழ ஆண்டாள் வீதியை சேர்ந்த உதயகுமார் (28), கீழ தேவதானம் பகுதியை சேர்ந்த மாரி செல்வம் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: