மதுராந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுராந்தகம்:  மதுராந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரை தலைமையிடமாக கொண்டு,  சுதந்திர போராட்ட தியாகி ஓ.என்.துரைபாபு, மொழி போராட்ட வீரர் து.பகிரதன்  நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பாக கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம்கள் மதுராந்தகம் நகரில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதன், 105வது கண் சிகிச்சை மருத்துவ முகாம் அப்பகுதியில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மதுராந்தகம் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 260 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கண் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக 37 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு,  சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: