உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

கடலூர், ஆக. 2:  கடலூர், டவுன்ஹால் அருகே உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கடலூர் அரசு பொது மருத்துவமனையின் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் தாய்ப்பால் நன்மைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மாணவிகள் ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடலூர் டவுன்ஹாலில் துவங்கிய பேரணி நெல்லிக்குப்பம் சாலை வழியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மீரா, சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய் லீலா, தலைமை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கவிதா, மாவட்ட குழந்தை மருத்துவ சங்க மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய மருத்துவ சங்கம் டாக்டர் முகுந்தன், அரசு மருத்துவர் சங்க மருத்துவர் டாக்டர் கேசவன் மற்றும் டாக்டர்கள் மதியழகன், பரிமேலழகன், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொழுதூர்: தொழுதூர் அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலையனூரில் மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் முன்னிலையில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. மலையனூர் அங்கன்வாடி சத்துணவு பொறுப்பாளர் கவிதா திருமுருகன், தலைவர் மற்றும் உப தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories: