பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி

பொன்னேரி: பொன்னேரியில் ஆக்கிரமிப்பில் இருந்த ₹80 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக  மீட்டனர். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய தாங்கல் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து கொண்டிருப்பதாக துளசி தாசர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், உடனடியாக அந்த ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தடப்பெரும்பாக்கம் பகுதிக்கு நேற்று நேரில் சென்று அங்குங்ள ஒரு குடியிருப்புக்கு செல்வதற்காக ஓடைக்கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ₹80 லட்சம். இதையடுத்து, அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: