திருச்சியில் செல்போன், ரொக்க பணம் முகமுடி நபர்கள் வழிப்பறி

திருச்சி, ஜூன் 25: திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன். இவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அவரை முகமூடி அணிந்த 3 நபர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புடைய செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் இருந்த மணிபர்சையும் பறித்து சென்றனர். இது குறித்து திருச்சி கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: