விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது

கும்பகோணம், ஜூன்.25: கும்பகோணம் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022-ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சியில் கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி பகுதிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.

தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருவாய் தீர்வாய கணக்கு தனிக்கையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகபுத்ரா தலைமை வகித்து, முருக்கங்குடி சரகத்திற்குட்ப்பட்ட 22 கிராம மக்களிடமிருந்து 142 மனுக்களை பெற்றார். இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வுகாணப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 28ம் தேதி நாச்சியார்கோவில், 29ம் தேதி சோழன் மாளிகை, 30ம் தேதி கும்பகோணம் பகுதியிலும் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Related Stories: