நெல்லையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

நெல்லை,ஜூன்25: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் நாளை 26ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

இதில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு, காசோலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சமரச விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு துவங்கி வைக்கிறார்.

ஆகவே பொதுமக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாக தீர்வுகாணலாம். இவ்வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: