பணிச்சுமை, கடன் தொல்லையால் ஆர்.ஐ தூக்கிட்டு தற்கொலை

ஆவடி, ஜூன் 25: பட்டாபிராம் அம்பேத்கர் நகர் சுசில் பிரான்சிஸ் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (42). இவர், சேப்பாக்கம் உட் கோட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தேவி (36). தம்பதிக்கு, தமிழ்செல்வன் (10) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பணிச்சுமை, கடன் தொல்லை மற்றும் பதவி உயர்வு கிடைக்காததால் அருண்குமார், மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறபப்டுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு படுக்கையறையில் உறங்கச் சென்றார்.

நேற்று காலையில் படுக்கை அறை கதவை மனைவி  நீண்டநேரம் தட்டியும் திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவிகளுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ந்தது. தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் விரைந்துவந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குபதிந்து விசரிக்கின்றனர்.

Related Stories: