துணை ஆணையர் பொறுப்பேற்பு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் 17ம் தேதி 2 மணிநேரம் தாமதமாக புறப்படும்

திருச்சி, ஜூன் 14: சோழன் விரைவு ரயில் ஜூன் 17ம் தேதி, திருச்சியிலிருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்திருப்பது:

திருச்சியிலிருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை , சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக (மெயின் லைன்) சென்னை எழும்பூர் வரை செல்லும் சோழன் விரைவு ரயில் தினசரி காலை 10.15க்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மாலை 5.30க்கு சென்னையை சென்றடையும். இந்த ரயில் வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 2 மணி நேரம் தாமதமாக பகல் 12.15க்கு திருச்சியிலிருந்து புறப்படும். கடலூர் மாவட்டம் சேர்ந்தனூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருத்துறையூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நேர மாற்றம். எனவே பயணிகள் அதற்கு ஏற்ற வகையில் தங்களது பயண திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: