சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 14: சட்டவிரோதமாக  வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள் தகவல்  தெரிவிக்கலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் விற்பனை  செய்பவர்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவுட்காய்  தயாரிப்பவர்கள் குறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகின்றது. இதன்படி பங்களாப்புதூர் மற்றும் புளியம்பட்டி காவல்நிலைய  எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அவுட்காய் வைத்திருந்த நபர்கள்  கைது செய்யப்பட்டு 24 அவுட் காய்கள் மற்றும் மூலப்பொருட்களான அரைகிலோ வெடி  உப்பு, 300 கிராம் கள்உப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற  சட்டவிரோத வெடிபொருட்க்ள வைத்திருப்பவர்கள் சம்மந்தமாக புகார் அளிக்க  விரும்புவோர் ஈரோடு எஸ்.பி.யிடம் நேரடியாகவோ அல்லது வாட்ஸ் அப் எண்  9655220100 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும் காவல் உதவி செயலி  மூலமும் புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர், முகவரி ஆகியவை  ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: