தீ குளித்து மூதாட்டி பலி

ஈரோடு, ஜூன் 14: சென்னிமலை  அடுத்துள்ள எம்எஸ்கே நகரை சேர்ந்தவர் வள்ளியாத்தாள் (85). இவர் கடந்த சில  ஆண்டுகளாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில்  சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு  கடுமையான மூட்டுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த வள்ளியாத்தாள் பாத்ரூமிற்குள்  சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர்  அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  முன்தினம் வள்ளியாத்தாள் இறந்தார்.

Related Stories: