திருப்போரூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருப்போரூர்: அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரைபடங்கள், தொழிற்கருவிகள் மூலம் பாடம் நடத்தி அவர்களுக்கு எளிதில் புரிய வைப்பது குறித்த எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி முகாம் நேற்று திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் கலந்துக் கொண்டனர். இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு எளிய முறையில் பயிற்சி அளிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கக் காட்சிகள் மூலமும் பாடப்புத்தகம் இன்றி ஓவியங்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை திருப்போரூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவசங்கரன், பாஸ்கரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருவளர்ச் செல்வி ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories: