எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

ஆலங்குடி, ஜூன் 11: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை சிஇஓ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மாதிரி வகுப்பு எடுத்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் துணை கருவிகள் கொண்டு பாடம் நடத்தியமை கண்டு பாராட்டினார். இதனை தொடர்ந்து, சிஇஓ மணிவண்ணன் பேசுகையில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, வகுப்பறையில் தினமும் கற்றல் கற்பித்தல் துணை கருவிகளோடு பாடம் நடத்த வேண்டும் என்றார்.இந்நிகழ்வின் போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன கல்வியாளர் தங்கராசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கமணி ஆகியோர் உடன் இருந்தனர்.இப்பயிற்சியில், தமிழ் பாடத்திற்கு கருத்தாளர்களாக அருள்தாஸ், பாலசுப்பிரமணியன், சித்திரைச் செல்வி ஆகியோரும், ஆங்கில பாடத்திற்கு கோபி, பாஸ்கர், சுகந்தி ஜீலியானா, வளர்மதி, கணித பாடத்திற்கு சூரியகாந்தி, விஜி, சுரேஷ் தங்கராஜ் ஆகியோரும் செயல்பட்டனர். இதில், 1 முதல் 3ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த

Related Stories: