அரசு கல்லூரியில் மென்திறன் பயிற்சி

கடலூர், ஜூன் 11: கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரியில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஏற்படுத்திய மென் திறன் மையத்தின் சார்பில் 2021-22ம் கல்வியாண்டிற்கான மென்திறன் பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் கல்வி அறிவுடன் மென்திறன்களையும் கற்று கொண்டு தங்களின் பண்பை வளர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆங்கில துறை தலைவர் டேவிட் சவுந்தர் வரவேற்றார். பொருளியியல் துறை தலைவர் பேராசிரியர் சாந்தி ராமகிருஷ்ணன் மற்றும் வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் வண்ணமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரியார் கலைக் கல்லூரி மென் திறன் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலு சுபேஷ் விளக்க உரையாற்றினார். ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர். பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories: