விபத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி

திண்டுக்கல், ஜூன் 9: குஜிலியம்பாறை  தாலுகா கோவிலூரில் கடந்த 2012ம் ஆண்டு பாகாநத்தம் கிராமம் தோப்பூரை  சேர்ந்த காளியப்பன், அவரது மனைவி பழனியம்மாள், அவர்களது 9 மாத குழந்தை  சர்மிளா ஆகியோர் டூவீலரில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்  அவர்கள் மீது மோதியதில் குழந்தை சர்மிளா சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும்  பழனியம்மாளின் ஒரு கை முறிந்து பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காளியப்பன்  தொடர்ந்த வழக்கில் வேடசந்தூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2019ம் ஆண்டு  கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால் வேடசந்தூர் அரசு  போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு  உத்தரவிட்டது. அதன்படி வேடசந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு  பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்

Related Stories: