தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி

பரமக்குடி, ஜூன் 8: பரமக்குடி நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேரணி நகராட்சி கமிஷனர் திருமால் செல்வம் தொடங்கி வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பரமக்குடி நகராட்சி, பரமக்குடி வைகை அரிமா சங்கம், உதயம் பவுண்டேஷன் இணைந்து நகரங்களை தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்திலிருந்து நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி சென்றனர். இந்த பேரணியை பரமக்குடி நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் அய்யனார், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் பழ சரவணன் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: