மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப கோரி தொமுச ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜுன் 8: திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். இதில் ஊதிய உயர்வை நிலுவைத்தொகையுடன் வழங்கிட வேண்டும், பஞ்சப்படி உள்ளிட்ட 23சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பை வழங்கிட வேண்டும், 3சதவீத பஞ்சப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 52ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். ரெடிப்லாய்மென்ட் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் அனைத்து மின்வாரிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: