மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:  ஈரோடு ஈ.வி.என் ரோட்டில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர்  அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை  குழுவினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு  மின்வாரிய பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் இந்திராணி தலைமை தாங்கினார்.  இதில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகையும் வழங்க வேண்டும்.  மின்வாரிய பணியாளர்கள் இதுவரை பெற்று வந்த பஞ்சப்படி, வீட்டுக்கடன்,  வாகனக்கடன், கல்விக்கடன் போன்றவற்றை தொடர்ந்து வழங்க வேண்டும். கடந்த  ஜனவரி முதல் வழங்க வேண்டிய, 3 சதவீத பஞ்சப்படி, சரண்டர் விடுப்பை பறிக்கும்  உத்தரவை திரும்ப பெற வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்பிட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாக  நடத்தி தீர்வு காண வேண்டும். மின்வாரியத்தில் புதிய பணியிடங்களை  ஏற்படுத்தி நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு  தொழிற்சங்க மாவட்ட தலைவர் துளசிமணி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: