அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சத்யா, வாலாஜாபாத் பேரூர் செயலாளர் அரிகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் திலக்குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பழனி, மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் உள்ளாவூர் பிரபாகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் துரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனிராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் புத்தாகரம் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: