கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருமழிசை பேரூர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை வகித்தார். பேரூர் நிர்வாகிகள் ஆர்.கருணாநிதி, வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், மதியழகன், சண்முகம், பி.அருள்,  ஆண்டாள், ராஜ், எஸ்.இளங்கோவன், பன்னீர்செல்வம், பாஸ்கர், எழிலரசன், கங்காதரன்,  சங்கர், தணிகை அரசு , மு.சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல், துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர்  சாதனைகளை விளக்கி பேசினார்.  

இதில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பேச்சாளர் ஈரோடு இறைவன், மாநில மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, ம.ராஜி, கே.ஜெ.ரமேஷ், காயத்ரி தர்,  எஸ்.ஜெயபாலன், த.எத்திராஜ், ஒன்றிய, நகர செயலாளர்கள் டி.தேசிங்கு, ஜி.ஆர்.திருமலை,  ஆர்.ஜெயசீலன், தி.வை.ரவி, நகராட்சித் தலைவர் உஷாராணி ரவி, ஒன்றியக் குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், தர், ப.ச.கமலேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி வேலு, கஸ்தூரி அருள், ஜீவா சதீஷ், அனிதா சங்கர் மற்றும் கே.கங்காதரன், நாகராஜ், ஜெயகுரு, ஜான்மேத்யூ, ரேவதி, தாமோதரன் , வேந்தன், ராகேஷ், அறிவழகன், என்.அன்பு, கே.குமரேசன், மோகன், எஸ்.வெங்கடேசன், தென்னரசு, சதீஷ், தனசேகர், டி.நாகராஜ், விஜயபாபு , அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.கே.வேலு, எம்.சங்கர் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories: