கமுதி அருகே வைகாசி பொங்கல் விழா

கமுதி: கமுதி அருகே வைகாசிப் பொங்கல் விழாவில் 200 கிடாய் வெட்டி விருந்து படைக்கப்பட்டது.கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவிலில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பால்குடம், வேல் குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தி வழிபட்டனர். பின்னர் 200 கிடாய் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்

Related Stories: