ஜமாபந்தியில் முதல் நாளில் 398 மனுக்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று துவங்கிய ஜமாபந்தியில் 398 மனுக்கள் பெறப்பட்டது.சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. சிவஙக்கை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்க நாள் நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் என 93மனுக்கள் பெறப்பட்டது. 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் துவங்கிய ஜமாபந்தியில் திருப்பத்தூர் வட்டத்தில் 28, காளையார்கோவில் வட்டத்தில் 35, காரைக்குடி வட்டத்தில் 55, தேவகோட்டை வட்டத்தில் 29, திருப்புவனம் வட்டத்தில் 52, மானாமதுரை வட்டத்தில் 37, இளையான்குடி வட்டத்தில் 37, சிங்கம்புணரி வட்டத்தில் 32 என மொத்தம் 398 மனுக்கள் பெறப்பட்டது. ஜூன் 4 வரை ஜமாபந்தி நடக்க உள்ளது. மனுக்களின் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, கள ஆய்வு மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் அனைத்து மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஆர்டிஓக்கள் முத்துக்கழுவன், பிரபாகரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: