கடலூர் மாவட்டத்தில் 7ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம்

கடலூர், ஜூன் 2: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் 7ம் தேதி முதல் 21ம் வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. புவனகிரி வட்டத்தில் கூடுதல் ஆட்சியர் தலைமையில் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், திட்டக்குடி வட்டத்தில் விருத்தாசலம் கோட்டாட்சியர் தலைமையில் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறுகிறது. காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உதவி ஆணையர் (கலால்), தலைமையில் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், விருத்தாசலம் வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், பண்ருட்டி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (முத்திரை தாள்) தலைமையில் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரையும் நடைபெறுகிறது. வேப்பூர் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு), தலைமையில் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் தொடர்பாக, மனுக்களாக எழுதி வருவாய் தீர்வாயம் நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Related Stories: