சங்க மாநாட்டில் வலியுறுத்தல் தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் அரசு அலுவலக வாகனங்கள் பொது ஏலம்

தஞ்சாவூர், ஜூன் 2: தஞ்சாவூர் டிஆர்ஓவின் பயன்பாட்டில் இருந்த வாகனம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக வாகனம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலக வாகனம் ஆகிய 4 சக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அலுவலக முகவரிக்கு ரூ.10,000 வங்கி வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும். கலெக்டர் அலுவலகத்திற்கு நாளை (3ம் தேதி) மாலை 3 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு மதிப்பீட்டு தொகை அளிக்கலாம். நாளை 3ம் தேதி மாலை 4 மணிக்கு வருகை புரிந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் மதிப்பீட்டு தொகை திறக்கப்படும். உறையின் மீது எந்த வாகனத்திற்கான மதிப்பீட்டு என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். நிபந்தனைகள் ஏல அறிவிப்பு நாள் மற்றும் நேரத்தினை மாற்றி அமைத்திட மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: