நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் மானூர் ஒன்றியங்கள் மாற்றி அமைப்பு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

நெல்லை, மே 31:  நெல்லை மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மானூர் ஒன்றியங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக திமுக  பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லை மத்திய  மாவட்டத்தில் உள்ள மானூர் வடக்கு, மானூர் தெற்கு, மானூர் கிழக்கு, மானூர்  மேற்கு ஆகிய 4 ஒன்றியங்கள், இனி மானூர் தெற்கு, மானூர் கிழக்கு, மானூர்  மேற்கு ஆகிய 3 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்ட 3  ஒன்றியங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சிகள் விவரம்: மானூர் தெற்கு  ஒன்றியத்தில் 1.தென்பத்து, 2. பேட்டை ரூரல், 3.நரசிங்கநல்லூர்,  4.கருங்காடு, 5.சுத்தமல்லி, 6. பழவூர், 7. கொண்டாநகரம், 8.கோடகநல்லூர்,  9.மேலகல்லூர், 10.சங்கரன்திரடு, 11.திருப்பணிகரிசல்குளம்,  12.துலுக்கர்குளம், 13.வெள்ளாளங்குளம், 14.சீதபற்பநல்லூர் ஆகிய 14  ஊராட்சிகள் இடம்பெறுகின்றன. மானூர் மேற்கு ஒன்றியத்தில் 1.மானூர்,  2.கானார்பட்டி, 3.அழகியபாண்டியபுரம், 4.வாகைகுளம், 5.உக்கிரன்கோட்டை,  6.தெற்குபட்டி, 7.குறிச்சிகுளம், 8.களக்குடி, 9.எட்டாங்குளம், 10.மாவடி,  11.மதவக்குறிச்சி, 12.வல்லவன்கோட்டை, 13.புதூர், 14.சேதுராயன்புதூர் ஆகிய  14 ஊராட்சிகள் இடம்பெறுகின்றன. மானூர் கிழக்கு ஒன்றியத்தில்  1.கட்டாரங்குளம், 2.பிள்ளையார்குளம், 3.செழியநல்லூர், 4.பிராஞ்சேரி,  5.சித்தார்சத்திரம், 6.கங்கைகொண்டான், 7.அலங்காரபேரி, 8.குப்பக்குறிச்சி,  9.பாலாமடை, 10.தாழையூத்து, 11.தென்கலம், 12.நாஞ்சான்குளம்,  13.பல்லிக்கோட்டை ஆகிய 13 ஊராட்சிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: