வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு

வலங்கைமான், மே 28: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் கடந்த 25ந் தேதி முதல் 27ந் தேதி வரை மூன்று நாட்கள் 1431ஆம் ஆண்டு பசலிக்கான ஜமாபந்தி நடந்தது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமையில் நடந்த இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வலங்கைமான், ஆலங்குடி, ஆவூர் ஆகிய மூன்று உள் வட்டங்களைச் சேர்ந்த 71 வருவாய் கிராமங்கள் சார்பில் கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இதில் இலவச வீட்டுமனை பட்டாகோரி 77 மனுக்களும், முதியோர் ஓய்வூதியம் கோரி 85 மனுக்களும், பட்டா மாற்றம் கோரி 70 மனுக்கள் என 232 மனுக்கள் வரப்பெற்றது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா 11 பயனாளிகளுக்கும், முதியோர் ஓய்வூதியம் 12 பயனாளிகள் மற்றும் பட்டா மாற்றம் 25 பயனாளிகளுக்கு என வழங்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தேவகி, மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: