இயற்கை சீற்றங்களால் பாதிப்பு பேரிடர் மீட்பு படையினர் விழிப்புணர்வு

கடலூர், மே 28: தமிழகம் முழுவதும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டமும் இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், சென்னை மற்றும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் அருண்குமார் சவான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் கடலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

தொடர்ந்து கடலூரில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில், பேரிடர் காலங்களில் முதியோர் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எவ்வித முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து அங்கு மரக்கன்றுகள் நட்டனர். தாசில்தார் பூபாலச்சந்திரன் உடனிருந்தார். இவர்கள் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Related Stories: