சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 27:  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா, மாவட்ட துணைத் தலைவர்கள் மஞ்சுளா, சுப்புலட்சுமி, செல்வி, மூர்த்தி, வெங்கிடு உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில், முதல்வர் அறிவித்துள்ளபடி, சத்துணவில், காலை உணவு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல ரூ.6,750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருணாநிதி பிறந்தநாளை

ஒரு மாதம் கொண்டாட வேண்டும்

ஈரோடு, மே 27:  ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், நெசவாளர் அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னீயூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகலிங்கம், செயலாளர்கள் சச்சிதானந்தம், பழனிச்சாமி, காஞ்சி அன்பழகன், பரணி மணி, நெல்லை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் மாதம் 3ம் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டும். அந்த மாதம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.

கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பித்து, அவரது முழு உருவச்சிலையை ஓமந்தூரார் வளாகத்தில் அமைத்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை கொண்டு திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கும், மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜின் தந்தை மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: