மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

தேனி, மே 26: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (மே 27) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு மற்றும அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பொறியிய் படிப்பு படித்தவர்கள், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான நகல் சான்றிதழ்களுடன் வந்து கலந்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: