கடலூரில் பாஜக சாலை மறியல்

கடலூர், மே. 26: பா.ஜ.க. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மத்திய சென்னை தலைவர் பாலச்சந்தர் என்பவரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம்  முன்பு பா.ஜ.க. வினர் திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில இளைஞரணி தலைவர் ரங்கேஷ், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல், நகர தலைவர் வேலு வெங்கடேசன், மாவட்ட செயலாளர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்  குணா ,பொதுச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் ஜெனித் மேகநாதன் ,வேலுமணி, பத்மினி, ஜெயா மற்றும்  நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: