தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்

ஈரோடு, மே 25: அரச்சலூர்  அடுத்துள்ள டி. மேட்டுப்பாளையம், காகத்தான்வலசு காலனியை சேர்ந்த பிளஸ் 2  மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தேர்வு  எழுத சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த  பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்த எவ்வித தகவலும்  இல்லாததால் அரச்சலூர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: