அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்

அரவக்குறிச்சி. மே 25: அரவக்குறிச்சி தாலுகா அரசு தலைமை மருத்துவமனையிலும், பள்ளபட்டி அரசு மருத்துவமனையிலும் 24 மணி நேர மருத்துவர்களை நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2019 ஜனவரி மாதம் பள்ளப்பட்டி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவர் உடன் கூடிய மருத்துவ வசதியும் நவீன உயர்ரக மருத்துவமும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போராட்டத்தை நடத்தி அதன் பிறகு அரவக்குறிச்சி, பள்ளபட்டி அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் கிடைத்து வந்தது. கடந்த 6 மாத காலமாக அரவக்குறிச்சி, பள்ளபட்டி அரசு மருத்துவமனைகளில் இரவு நேர மருத்துவர்கள் இல்லை. இரவு பணிகளில் உள்ள செவிலியர்கள் மூலம் வைத்தியம் பார்க்க படுவதுடன் செவிலியர்கள் தொலைபேசி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைத்தியம் பார்க்கும் நிலைமையும் உள்ளது. அரவக்குறிச்சி தாலுகா தலைமை மருத்துவமனையிலும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையிலும் இருபத்தி நான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரவக்குறிச்சி ஒன்றியக்குழுவினர் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: